திருஅவையின் தலைமைப் பதவியில் 12 ஆண்டுகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12ஆம் ஆண்டு நிறைவு மார்ச் 13, வியாழக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஜெமெல்லி மருத்துவர்களுடன் இணைந்து அதனைக் கொண்டாடியுள்ளார் திருத்தந்தை.
வியாழக்கிழமை மாலை ஒரு கேக்குடனும் மெழுகுதிரிகளுடனும் திருத்தந்தையின் அறைக்குள் சென்ற, அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவக்குழு, திருத்தந்தையோடு இணைந்து கேக் வெட்டி அந்நாளை சிறப்பித்துள்ளது.
தான் திருஅவையின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 12ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்த திருத்தந்தை, வத்திக்கானில் இடம்பெறும் தவக்கால ஆண்டு தியானத்திலும் காணொளி வழி கலந்து கொண்டார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை இரவு அவர் நன்முறையில் உறங்கியதாக வெள்ளி காலையில் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது