இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்.” என திருத்தூதர் பேதுரு கூறுகிறார்.
நமது ஞான மேய்ப்பவர்களுக்கு எல்லாத் தருணங்களிலும் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 23:4-ல்,
“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
எத்தகையத் துன்ப நேரங்களிலும் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று துணிவுடனும், நம்பிக்கையுடனும் நாம் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தியில்,
“உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.” என நமதாண்டவர் இயேசு கூறியதை நாம் வாசித்தோம்.
முதல் திருத்தந்தையான புனித பேதுருவின் மீது கட்டப்பட்ட கத்தோலிக்க திருச்சபையைக் குறித்தே ஆண்டவர் கூறினார் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இன்றையப் புனிதரான கார்ட்டோனா நகர் புனித மார்கரெட், பொய்யாகக் குற்றஞ்சாட்டபட்டவர்களின் பாதுகாவலராவார்.
சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற நிரபராதிகளின் விடுதலைக்காக இப்புனிதர் வழியாக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நமது திருத்தந்தை பிரான்சிஸ் பரிபூரண நலம் பெற வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.