தமிழர் விடுதலைக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மாவீரகளை நினைவு கூறும் நாள்- கார்திகை 27
கார்த்திகை இருபத்தியேழு
உம் கல்லறையை வணங்கிடும் நாள்….
கார்த்திகை பூவினால்
உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்…
மாவீரர் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றிடும் நாள்..
எம் மனமும் உன் ஆன்மாவும்
கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்
மலைகளைப் பிழந்து
தமிழன் வீரம் சொன்னவர்கள்….
உலகையே எதிர்த்து நின்று
எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…
உலகச் சதிகளினால்
மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்….
இறந்தும் நம் மானம் காக்கும்
தமிழினத்தின் வித்துக்கள்….
ஒன்றல்ல இரண்டல்ல
முப்பத்தையாயிரத்துக்கு மேல்
தங்கள் மூச்சுக்களைத் திறந்து
எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்….
வியூகம் உடைக்க
வாவென்று அழைக்கு முன்னே..
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்கள்….
சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி…
விடுதலையே மேலோங்கி ; அதற்காய்
மரணித்த வீரர்கள்…..
Comments are closed.