நற்செய்தி வாசகம்
+ தூய லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம், அதிகாரம் 18; வசனங்கள் 35 முதல் 43 வரை
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், *இது என்ன?* என்று வினவினார்.
நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
உடனே அவர், *இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்* என்று கூக்குரலிட்டார்.
முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், *தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்* என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,
*நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்* என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், *ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்* என்றார்.
இயேசு அவரிடம், *பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று* என்றார்.
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
*கிறிஸ்துவின் நற்செய்தி,*
கிறிஸ்துவே உமக்கு புகழ்.
Comments are closed.