அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை

0

நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 3 திங்கள் கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் Scandinavi என்னும் வடக்கு ஐரோப்பாவின் நாடுகளான ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 1200 பேரைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் நமது எதிர்நோக்கு பலப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், எண்ணிக்கையில் சிறிய அளவாக Scandinavi பகுதியில் தலத்திருஅவை இருந்தாலும்,எப்போதும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி  கூறுவோம் என்றும், நம்பிக்கை என்னும் விதையானது பலதலைமுறை மறைப்பணியாளர்களாலும் விடாமுயற்சியுள்ள மக்களாலும் நடப்பட்டு, நீர்பாய்ச்சப்பட்டு, இன்றளவும் பலனளிக்கின்றன என்றும் கூறினார்.

கடவுளின் இத்தகைய செயல்களைக் குறித்து நாம் வியப்படைய வேண்டாம் ஏனெனில் கடவுள் தன்மேல் நம்பிக்கைக் கொண்ட மக்களுக்கு வாக்குறுதியளித்ததை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர் என்றும் கூறினார் திருத்தந்தை.

Leave A Reply

Your email address will not be published.