குருத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்!
இறையழைத்தல் என்பது நம் வாழ்வுக்கான கடவுளின் வடிவமைப்பு, கடவுள் நம்மில் எதைப் பார்க்கிறார், அவரது அன்பான பார்வையை நகர்த்துவது எது என்பதை அறிவது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே, நமது உண்மையான சாரத்தின் ஆணிவேராக அமைகிறது என்பதை உணர்வது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜனவரி 16, வியாழக்கிழமை இன்று, உரோமையிலுள்ள உள்ள அர்ஜென்டினா நாட்டின் அருள்பணியாளர்களுக்கான கல்லூரியில் மேற்படிப்பு பயில்வோரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அருள்பணித்துவத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பணியாளர் Brochero அவர்களின் அருள்பணித்துவம் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒருவரின் அடையாளம் மற்றும் கடவுளின் திட்டத்தின் மையப் பகுதியாக அருள்பணித்துவ வாழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவரது குருத்துவ வாழ்வு வலியுறுத்துகிறது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் முழு அர்ப்பணிப்பு, நற்செய்திக்கான தற்கையளிப்பு, ஆன்மிகப் போராட்டங்களில் பணிவு, ஆயர்கள் மற்றும் சக அருள்பணியாளார்களுடன் ஆழ்ந்த சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை தந்தை Brochero அவர்களின் வாழ்விலிருந்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, திருநற்கருணை மீதான அவரது பக்தி, சவாலான சூழ்நிலைகளிலும் கூட, புனிதத்துவத்திற்கான அவரது அருள்மதிப்பை (reverence) எடுத்துக்காட்டுகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
Comments are closed.