புதிய வழிகளை நமக்காகத் திறக்கும் இயேசு
இயேசு தாழ்ச்சியின் வழியாக இவ்வுலகிற்கு வந்தார் என்றும், நமக்கான புதிய வழிகளை அவர் திறக்கின்றார் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 11 சனிக்கிழமை ஹேஸ்டாக் கிறிஸ்துபிறப்புக் காலம் என்ற தலைப்பில் இவ்வாறு குறுஞ்செய்தி வழியாக தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து நமக்கான இலக்கினை சுட்டிக்காட்டுகின்றார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தாழ்ச்சியின் வழியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து, நமக்கான புதிய வழிகளைத் திறக்கின்றார், புதிய பாதைகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார், நமக்கான இலக்கை அவர் வெளிப்படுத்துகின்றார் என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
Comments are closed.