பெண்ணிடம் பிறந்த இயேசு தாழ்ச்சியின் அடையாளம்

ர்தினால்கள், ஆயர்கள் அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் என ஏறக்குறைய 5500 பேர் பெருங்கோவிலில் கூடியிருக்க சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியினைத் துவக்கினார் திருத்தந்தை. எண்ணிக்கை நூலில் இருந்து முதல் வாசகம் பிரெஞ்சு மொழியிலும், திருத்தூதர் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் இருந்து இரண்டாம் வாசகம் இஸ்பானிய மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டது. அதன்பின் திருத்தொண்டர் ஒருவர் லூக்கா நற்செய்தியில் இருந்து வாசகத்தினை இத்தாலிய மொழியில் வாசித்தளித்தார்.

அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனின் தாயான கன்னி மரியா பெருவிழா திருப்பலி மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார், திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

நமது வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டினை இறைவன் கொடுத்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் நமது எண்ணத்தை அன்னை மரியாவை நோக்கி உயர்த்துவது மிக நல்லது. இறைவனின் தாயான மரியா இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்துகின்றார். நம்மை அவரிடம் மீண்டும் கொண்டு சேர்க்கின்றார். அவரைப்பற்றி நம்மிடம் எடுத்துரைத்து அவரிடமே நம்மை அழைத்துச் செல்கின்றார். இவ்வாறாக கிறிஸ்து பிறப்புக் காலத்தில் அன்னை மரியின் பெருவிழா நம்மை மகிழ்வில் ஆழ்த்துகின்றது. கன்னி மரியின் வயிற்றில் இயேசு மனு உருவாகி நம்மில் ஒருவரானார். யூபிலி ஆண்டிற்கான புனிதக் கதவினை நாம் திறந்துதுள்ள நமக்கு இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வரும் கதவாக நுழைவாயிலாக அன்னை மரியா இருக்கின்றார் என்பதை நமக்கு நினைவூட்டப்படுகின்றது.  

Comments are closed.