புனிதம் என்பது கடவுளின் கொடை, அவர் நம்மை புனிதப்படுகிறார்!
புனிதம் என்பது கடவுளின் கொடை, அவர் நம்மைப் புனிதப்படுகிறார், ஆகவே நம்மை நாமே புனிதப்படுத்திக்கொண்டு, நம்முடைய இதயங்களை அவருடைய இதயங்களாக மாற்றும்படி இறைவனிடம் மன்றாடுவோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 28, வியாழன் இன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை அன்புகூர்வது போல பிறரை அன்புகூரத் தடுக்கும் எல்லாவற்றிலிருந்தும் கடவுளின் அருள் நம்மைக் குணப்படுத்துகிறது மற்றும் விடுவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.