நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்’ என்பதே இயேசுவை நோக்கிய செபம்
நான் உம்மில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்’ என இயேசுவை நோக்கி நாம் கூறும் வார்த்தைகளே மிகவும் பிரபலமான செபம், இதற்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை என நவம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் இதயத்தை நோக்கி நேரடியாக பாய்ந்து செல்லும் மிகவும் பிரபலமான செபமாக ‘நான் உம்மில் நம்பிக்கைக் கொள்கிறேன்’ என்பது உள்ளது, இங்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில் தன் டுவிட்டர் குறுஞ்செய்திகளை வழங்கிவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையர்களின் டுவிட்டர் பக்கத்தின் ஆங்கிலப் பிரிவை மட்டுமே இதுவரை 10 இலட்சத்து 63 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
Comments are closed.