பாவிகளின் செபத்திற்கு செவிசாய்க்கும் இறைவன்

இறைவன் பாவியின் செபத்திற்கு இறுதிவரை செவிமடுக்கின்றார் என்றும், கடவுளின் இதயத்திற்குத் திரும்புவதன் வழியாக நாம் அனைவரும் கடவுளின் மீட்பின் நம்பிக்கையைக் காணலாம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 9 சனிக்கிழமை தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்புப் பெருவிழாவன்று வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினாலும் என்ற சாலமோனின் ஞானம் நூலில் உள்ள இறைவார்த்தைகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

கடவுள் பாவிகளின் செபத்திற்கு இறுதிவரை செப்விசாய்க்கின்றார். கடவுளுடைய இதயத்திற்கு நாம் திரும்புவதன் வழியாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிவிலிகளின் கண்களுக்கு இறந்தவர்களைப்போல் தோன்றினாலும் மீட்பின் நம்பிக்கையைக் காணலாம் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

Comments are closed.