நவம்பர் 7 : நற்செய்தி வாசகம்
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா?
கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.
அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————–
மறையுரைச் சிந்தனை (நவம்பர் 07)
ஏழை எளியவருக்கு உணவு கொடுங்கள்!
கடந்த 125 ஆண்டுகளாக அணையாத அடுப்புடன் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கின்றது சென்னை பார்க் டவுனில் உள்ள அன்னதான சமாஜம். அதை யார் தொடங்கினார், எப்படி அது தொடங்கப்பட்டது என்பதற்கான வரலாறு இது.
1863 ஆம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் முகலுார் கன்னையா என்பவர். ஒவ்வொருநாளும் அவர் பள்ளிக்கூடத்திற்கு போய்வரும்போது வழியில் பல ஏழைகள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்தார். அப்போது அவர்
‘வேலை கிடைத்ததும் இவர்களுக்கு சம்பளத்தில் இருந்து ஏதாவது செய்யவேண்டும்’ என்று எண்ணினார். அதுபோலவே அவருக்கு வேலை கிடைத்ததும் முதல் சம்பளத்தில் இருந்து நாலானாவை ஒதுக்கினார். தன்னைப்போலவே எண்ணம் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கூட்டாக சேர்த்துக்கொள்ளலாம் என அலுவலகத்தில் அழைப்பு விடுத்தார். நண்பர்களும் அவரது அழைப்பை ஏற்று காலாணா முதல் ஒரு அணாவரை அவருக்குக் கொடுத்து உதவியதால் மூன்று ரூபாய்கும் மேல் அவருக்குக் கிடைத்தது. (அந்தக் காலத்தில் மூன்று ரூபாய் என்றால் மிகப்பெரிய தொகை)
தனக்குக் கிடைத்த பணத்தை வைத்துகொண்டு ஓர் உணவகத்தில் பேசி 12 பெரியவர்களுக்கும் 6 சிறியவர்களுக்கும் (இதில் உடல் ஊனமுற்றவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கு முதலிடம்) ஒரு மாதம் சாப்பாடு போடுவதற்கு ஏற்பாடு செய்தார், அப்படி ஏற்பாடு செய்து சாப்பாடு போட்ட முதல் நாள் 1889 ஆம் ஆண்டு மார்ச் 1ந்தேதி ஆகும். நாளாக நாளாக கன்னையா ஒரு வேளை சாப்பாடை இரு வேளையாக்கினார், அன்போடு அவர்களுடன் பழகினார், நண்பர்கள் உறவினர்களிடம் பணம் கேட்டு வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே போனார். ஒரு வருடத்தில் இப்படி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 300 ஆகியது.
Comments are closed.