அன்பை வெளிப்படுத்தும் கல்விச் செயல்முறைகள்

கல்விச் செயல்முறைகள் வழியாக நமக்கு அருகில் இருப்பவர்கள், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மீது நாம் அன்பை வெளிப்படுத்துகிறோம் என்றும், கல்விமுறை, நோக்கங்கள் அன்பின் மீது நிறுவப்பட வேண்டியது அவசியம், எப்போதும் அன்புடன் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 31 வியாழனன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கத்தோலிக்க கல்வி நடவடிக்கைகளுக்கான இயக்கத்தின் 11 ஆவது தேசிய மாநாட்டின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித வாழ்க்கையின் மாண்பு நிறைவடைதல் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற இடத்தை கண்டடைவதற்குமான ஒரு தொடர்புடைய சூழலைக் கண்டறியும் இடமே கல்வி என்றும் கூறினார்.

1990 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையில் இருந்து, கத்தோலிக்க ஆசிரியர் இயக்கத்தின் பாரம்பரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து மிகுந்த படைப்பாற்றலுடன், காலத்தின் அறிகுறிகளைக் கவனத்தில் கொண்டு, நற்செய்தியின் வழியாக தங்களை எப்பொழுதும் ஒளிரச் செய்துகொண்டிருக்கும் கத்தோலிக்க கல்வி நடவடிக்கைகளுக்கான இயக்கத்தினரின் பணியினைப் பாராட்டினார் திருத்தந்தை.

கிறிஸ்தவக் கல்வியானது மானுடவியல் மற்றும் கலாச்சார மாற்றங்களால் குறிக்கப்படாத நிலப்பரப்பைக் கடந்து செல்கிறது என்றும், கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் அதற்கான பதில்களை நாம் தேடுகின்றோம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், இதன்வழியாக பல குடும்பங்கள், பள்ளிகள், திருஅவைச் சமூகங்கள், சங்கங்கள் கல்வியியல் ஆகியவை நமக்குக் கற்பிக்கும் நேர்மறையான அனுபவங்களை நாம் சேகரிக்கின்றோம் என்றும் கூறினார்.

Comments are closed.