அக்டோபர் 8 : நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————–

நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

பொதுக் காலத்தின் இருபத்து ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I கலாத்தியார் 1: 13-24

II லூக்கா 10: 38-42

நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

யாருமே கேட்கவில்லை:

பணக்காரர் ஒருவர் தன்னுடைய சொகுசுக் காரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செங்கல் அவருடைய காரில் பட, அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் செங்கல் வந்த திசையைப் பார்த்தார். அங்கே சிறுவன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

“இந்த வண்டியின் விலை உனக்குத் தெரியுமா? ஏன் என்னுடைய வண்டியில் செங்கல்லை எறிந்தாய்?” என்று பணக்காரர் சிறுவனைப் பார்த்துச் சீறினார். “என்னுடைய தம்பியை சக்கர நாற்காலியில் வைத்துப் பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன். வழியில் ஒரு பள்ளம் இருந்ததால், வண்டி கீழே சரிந்து அவன் கீழே விழுந்துவிட்டான். அவனை வண்டியில் தூக்கி வைப்பதற்கு என்னால் முடியவில்லை. இதனால் நான் இந்த வழியாகப் போன பலரையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டுப் பார்த்தேன். யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. ஆகவேதான் செங்கல்லை எடுத்து எறியவேண்டி இருந்தது” என்று பொறுமையாகச் சொல்லி முடித்தான் அந்தச் சிறுவன்.

Comments are closed.