லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உரை
பெல்ஜியத்தில் உள்ள லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களிடம் திருத்தந்தை ஆற்றிய உரையின் தமிழாக்கச் சுருக்கம்
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நீங்கள் என்னிடம் தொடுத்த கேள்விகளில் எதிர்காலம் மற்றும் துன்பம் பற்றிய கேள்வியானது என் மனதை பாதித்தது. கட்டுப்பாடற்ற வகையில் சுற்றுச்சூழலையும் மக்களையும் அழிக்கும் தீமை எவ்வளவு வன்முறையானது கொடியது என்பதை நாம் நன்கு காண்கிறோம்.
போர் என்பது மிகக் கொடூரமான விளைவுகளை வெளிப்படுத்துகின்றது. இன்று அதிக வருமானம் ஈட்டும் தொழில்களாக ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன. ஊழல் என்பது நவீன அடிமைத்தனமாக விளங்குகின்றது. நாம் சார்ந்திருக்கும் சமூகத்தை மாசுபடுத்தி ஆதிக்கத்தின் கருவியாக மாற்றுகின்றது. கடவுளுடன் இணையும் மனிதனின் அன்பை அடிமைத்தனமாக மாற்றுகின்றது.
தீமை என்பது இறுதி வார்த்தையல்ல என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் நன்கு அறிவோம். எதிர்நோக்கு நமது கடமையாக, ஒருபோதும் ஏமாற்றமடையாத நம்பிக்கையாக, உறுதியானதாக விளங்கவேண்டும். எனவே உங்களிடயே நன்றியுணர்வு, நோக்கம், நம்பகத்தன்மை என்னும் மூன்று கருத்துக்கள் குறித்து எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
Comments are closed.