பிரச்சனைகளில் இயேசுவின் கேள்விகளை கண்டுணர்ந்து நடைபோடுவோம்
நம் இறைவேண்டலில் நமக்குத் தேவையானதை இறைவனை நோக்கிக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, ஏனைய பிரச்சனைகளும் நமக்கென எழுவதை நாம் உணர்கிறோம் என செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் இறைவேண்டல் சமயத்தில் எழும் ஏனைய பிரச்சனைகளில் இயேசுவின் கேள்விகளை நாம் கண்டுணர்ந்து நன்மைத்தனத்தை நோக்கி நடைபோடும்போது, ஆழமான அன்பிற்குள் கொண்டுச்செல்லப் படுகிறோம் என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் நம்முடன் உரையாடலில் நுழைந்து வாழ்வை வழங்குவது உட்பட முக்கியமானவைகளில் நாம் முதிர்ச்சியடைய உதவுகிறார் என மேலும் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் குறுஞ்செய்திகளை வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.