இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 29.09.2024
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.” என சபைஉரையாளர் நூலில் கூறப்பட்டுள்ளது.
முதுமைவரை பொறுத்திருக்காமல் இளமையிலேயே இறைவனைத் தேடுதல் நலம் என்பதை இளைஞர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 90:13-ல்,
“ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.” என கூறப்பட்டுள்ளது.
நேர்மையற்றோர் நலமாக உள்ளனர். நேர்மையோடு இருக்கும் எனக்கு ஏன் இந்த நிலை? என்று புலம்பும் மக்களின் மனக்குறைகளை இறைவன் கண்ணுற்று அவர்களது நிலையை மாற்ற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் புனிதரும், முதல் மறைசாட்சியுமான இன்றைய புனிதர் புனித லோரென்ஸோ ரூயிஸை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம் முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.