வன்முறைகளைத் தூண்டும் வழிமுறைகளாக, மதங்கள் மாறக்கூடாது

செப்டம்பர் 22 முதல் 24  வரை Sant’Egidio அமைப்பினரால் பாரிசில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிக்கான கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அமைதிக்கான செய்தியைத் தெரிவித்துள்ளார். 

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அசிசியில், அமைதிக்கான முதல் கூட்டம் துவங்கி 38 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், திருஅவைத்  தலைவர்கள், பிற மதத் தலைவர்கள், அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில்,   இப்போது நாம் உலகை அழித்துக் கொண்டிருக்கிறோம், அதனை  நிறுத்த வேண்டும்  என்று அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரை நிறுத்துங்கள் என்னும் அவர்களின்  குரலோடு தானும் இணைவதாக தெரிவித்துள்ள திருத்தந்தை, “கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் போர்களைத் தூண்டுவதற்கு மதங்கள் பயன்படுத்தப்பட்டன எனவும்,  இச்செயல்  நம் நாட்களிலும்  தொடர்கிறது என்றும், புனித அசிசியாருடைய உள்ளுணர்வின் தாக்கத்தால்  பாரிசில் நடைபெற்ற இந்த சந்திப்பானது, மக்களிடையே உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு அணுகுமுறைகள், பகைமை, தீவிரவாதம், வன்முறை ஆகிவற்றைத்  தூண்டக்கூடாது என்றும், இந்த துயரமான   உண்மைகள், மத படிப்பினைகளிலிருந்து  விலகியதன் விளைவாகும் என்றும் கூறியுள்ளார்  திருத்தந்தை. 

மேலும்,  மதங்களை அரசியல் ரீதியாகக் கையாள்வதிலிருந்தும்,  வரலாற்றின் அடிப்படையிலும், அனைவரின்   இதயங்களிலும்  உள்ள மத உணர்வுகளை தங்களுக்கு  சாதகமாக்கிக் கொண்ட மதக் குழுக்களின் சுயநல விளக்கங்களாலும் வன்முறைகள்  விளைகின்றன  என்றும் தெரிவித்தார்.

Comments are closed.