அரசுத்தலைவர்கள் மற்றும் அரசியல் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு

ரசர் ஹென்றி ஆல்பர்ட், அரசி மரியா, பிரதமர் Luc Frieden ஆகியோரைச் சந்தித்து  அரசு மாளிகையில் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு சர்கிள் சைட் என்னுமிடத்தில் இலக்ஸம்பர்க் நாட்டின் அரசியல் தலைவர், அரசியல் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றினார். முதலில் பிரதமர் Luc Frieden திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்று தனது உரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனது 46ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் உரையை இலக்ஸம்பர்க் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை தனது உரையைத் நிறைவு செய்ததும் ஒருசில அரசுத்தலைவர்கள் திருத்தந்தையை சந்தித்து வாழ்த்தினர்.

கூட்டம் நிறைவுற்றபின் அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள் திறந்த காரில் பயணித்து, கூடியிருந்த இலக்ஸம்பர்க் மக்கள் நடுவில் வலம் வந்தார். அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை 1.65 கிமீ காரில் பயணித்து இலக்ஸம்பர்க் பேராயர் இல்லம்  வந்தடைந்தார். மதிய உணவினை பேராயர் இல்லத்தில் எடுத்துக்கொண்ட திருத்தந்தை அவர்கள் மதிய உணவிற்குப் பின் சற்று நேரம் இளைப்பாறினார்.

செப்டம்பர் 26 காலை இலக்ஸம்பர்க் அரசு அதிகாரிகள் அரசியல் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலையில் இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தில் அங்குள்ள கத்தோலிக்க குழுமத்தாரை சந்தித்து உரை வழங்க உள்ளார். இத்துடன் திருத்தந்தையின்  முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வருகின்றன. திருத்தந்தையின் பயணம் நல்ல முறையில் நிறைவு பெற அவருக்காகவும் அவரது பணிக்காகவும் தொடர்ந்து செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். 

Comments are closed.