நட்பின் சுரங்கப் பாதையாகத் திகழ்ந்திடுங்கள்!

வியாழக்கிழமை இன்று, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள, இஸ்திக்லால் மசூதியில் நிகழ்ந்த அனைத்து மதக்கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,  ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியில் உங்கள் அனைவரோடும் இனணந்திருப்பதில் நான் மகிழ்வடைகின்றேன். தொழுகை மற்றும் இறைவேண்டலுக்கான இவ்விடம் மனிதகுலத்திற்கான பெரியதொரு இல்லம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது,

மேலும், இந்த மசூதியின் வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்தவரான ஃபிரெட்ரிக் சிலபன் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டின் வரலாறு முழுவதிலும், அதன் கலாச்சாரத்தின் கட்டமைப்பிலும், மசூதிகளும் மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே, மதங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக உணர்வுகளுக்கு இடையே உரையாடல், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் இணக்கமான சகவாழ்வுக்கான இடங்கள் என்பதற்குச் சான்றளிக்கின்றன.

இது நீங்கள் ஒவ்வொரு நாளும் வளர்க்க அழைக்கப்படும் உங்களுக்கான சிறந்ததொரு பரிசு. ஆகவே, மத அனுபவங்கள் ஓர் உடன்பிறந்த மற்றும் அமைதியான சமூகத்திற்கான குறிப்புப் புள்ளிகளாக (reference points) இருக்கலாமே தவிர, மோதலுக்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடக் கூடாது.

Comments are closed.