கடவுள் கொடுத்த பரிசு நமது இருப்பு – திருத்தந்தை
நமது இருத்தல் என்பது நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கடவுள் கொடுத்த ஒரு பரிசு என்றும், கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், மாறாக நமது குரலுக்கு செவிசாய்த்தல், மகிழ்தல், அழுதல் என எல்லாவற்றையும் நம்மோடு இணைந்து செய்வதை நன்கு அறிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 20 சனிக்கிழமை மறைசாட்சியான தூய அப்பலோனாரிஸ் நினைவு நாளன்று வாழ்க்கை குறித்த தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்க்கையானது எப்பொழுதும் வாழ்வதற்குத் தகுதியானது என்றும், எல்லாமே நம்மை விட்டு மறைந்து போவது போல தோன்றினாலும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை எப்போதும் கொண்டுள்ளது என்றும் குறுஞ்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கடவுள் கொடுத்த ஒரு பரிசு, நமது வாழ்நாள்களின் நீட்டிப்பு, நமது இருத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் மாறாக நமது குரலுக்கு எவ்வாறு செவிசாய்ப்பது, நம்மோடு மகிழ்வது, துன்ப நேரத்தில் நம் உடன் அழுவது என எல்லாவற்றையும் நன்கு அறிந்தவர் அவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.