உடன்பிறந்த உறவு சமுதாயத்தை உருவாக்குவோம்!
இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே ஒரு புதிய பிணைப்பு தேவை என்றும், இன்னும் வளர்ந்து கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையின் தளிர்களுக்கு அதிக வாழ்க்கை அனுபவம் கொண்ட முதியவரகள் நீரூற்றட்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 24, இப்புதனன்று, தாத்தா பாட்டி மற்றும் முதியவர்கள் என்ற ஹாஸ்டாக்குடன் குறுஞ்செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் அருமையை அறிந்து உடன்பிறந்த உறவு சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் தனது திருத்தந்தை பொறுப்பிலிருந்து பதவி விலகிய பிறகு, அவரது வெவ்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்குகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. தற்போது, திருத்தந்தையின் ஆங்கில டுவிட்டர் கணக்கில் 1 கோடியே 89 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். மேலும் ஒன்பது கணக்குகளுக்கு இடையில், மொத்தம் 5 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
Comments are closed.