உங்களின் இளமை இயேசுவின் கொடையாகட்டும்!

கிறிஸ்து உங்கள் இயற்கையான நம்பிக்கையை உண்மையான அன்பாக மாற்றட்டும்; அவரின் அன்பு தியாகம் செய்யத் தெரிந்த அன்பு, அது நேர்மையானது, நம்பகத்தன்மைகொண்டது மற்றும் உண்மையானது, இதனால் உங்கள் இளமை இயேசுவுக்கும் உலகத்திற்கும் ஒரு கொடையாக மாறட்டும்  என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 15 முதல் 20 வரை பராகுவேயின் அசுன்சியோனில் இடம்பெற்றுவரும் கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்க தேசிய இளைஞர் அமைச்சகத் தலைவர்களின் 23-வது கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.

இக்கூட்டத்தின் பங்கேற்பாளர்களை வாழ்த்துவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திருத்தந்தை, திருஅவைக்கான இளையோர் பணியின் மதிப்பை வலியுறுத்தியதுடன், தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி கிறிஸ்து பெரிய காரியங்களைச் செய்ய இளைஞர்கள் அவரை அனுமதிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இயேசு கூறும் ‘எழுந்திரு’ என்ற கட்டளை, ஒரு பணியையும் பொறுப்பையும் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம்மைக் கடந்து சென்று நம் காதில் கிசுகிசுத்து, கீழே குனிந்து, நாம் விழும் ஒவ்வொரு முறையும் நம்மை உயர்த்துவதற்குத் தம்முடைய கரங்களைக் கொடுக்கும் ஆண்டவருக்கு நாம் பயப்பட வேண்டாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்

Comments are closed.