இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

தனது வாழ்நாள் முழுவதும் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை புரிவதில் செலவிட்ட இன்றைய புனிதர் புனித கமில்லஸ் டி லெல்லிஸ் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாவலராவார்.

மக்களின் உயிர்காக்கும் மருத்துவ சேவையை புரியும் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

கிறிஸ்துவின் திருஇரத்தம் நமது பாவங்களை எல்லாம் கழுவி நம்மைப் புதுப்படைப்பாக்கிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து

கிறிஸ்துவின் திருவுடல் நம் நோய்களை எல்லாம் குணமாக்கி நம்மைப் புதுப்பொலிவுடன் மாற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

திருஅவையின் மறுமலர்ச்சிக்காக தற்போது பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதல் நன்கு செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.