அமைதிக்காக ஒரு நிமிடத்தை இறைவேண்டலில் செலவிடுவோம்
இன்று நாம் ஒவ்வொருவரும் நண்பகல் ஒரு மணிக்கு அமைதிக்காக மௌனமாக குறைந்தபட்சம் ஒரு நிமிடத்தை இறைவேண்டலில் செலவிடுவோம் என ஜூன் மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, அதாவது அன்னைமரியாவின் மாசற்ற திருஇதயத்தை கொண்டாடும் இந்நாளன்று அன்னைமரியாவின் பரிந்துரையை, அமைதிக்காக வேண்டி ஒரு நிமிடம் மௌனமாக இறைவேண்டல் செய்வோம் என விண்ணப்பித்துள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மனித குடும்பத்தின் அரசியே, உம் மக்களுக்கு உடன்பிறந்த உணர்வின் பாதையை காண்பித்தருளும் எனவும், அமைதியின் அரசியே, எம் உலகுக்கு அமைதியைப் பெற்றுத் தாரும் எனவும் வேண்டுவோம், என மேலும் தன் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
Comments are closed.