தூய ஆவியார் நம்மை ஆறுதல்படுத்துகிறார்!
தூய ஆவியார் நம்மை ஆறுதல்படுத்துகிறார், கடவுளின் அன்பிலும் அவருடைய பார்வையிலும் நம் கவனத்தை செலுத்துவதன் வழியாக, நம் நினைவுகளைக் குணப்படுத்துகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 23, இவ்வியாழனன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறார். நம்மை ஏற்றுக்கொள்ளவும், மன்னிக்கவும், கடந்த காலத்துடன் நம்மை ஒப்புரவாகவும், புதிதாக வாழ்வைத் தொடங்கவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்
Comments are closed.