இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

பொதுத் தேர்வு முடிவுகளை எதிர் நோக்கியிருக்கும் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

மாதாவின் வணக்கம் மாதமாகிய இந்த மே மாதத்தில் நாம் குடும்ப செபம்/ குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினை தொய்வில்லாமல் நமது இல்லங்களில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இன்றைய புனிதர் புனித தமியான் தொழு நோயுற்றோரின் பாதுகாவலராவார்.

தொழு நோய் மற்றும் தோல் நோயினால் அவதியுறும் எண்ணற்ற மக்கள் பரிபூரண சுகம் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.