கொனேலியன் துறவற சபை குருக்கள் தங்கள் பணியை பருத்தித்துறை மறைக்கோட்டத்திலுள்ள மிருசுவில் பங்கில் ஆரம்பித்துள்ளனர்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அன்பின் பணியாளர் துறவற சபை குருக்கள் தங்கள் பணியை பருத்தித்துறை மறைக்கோட்டத்திலுள்ள மிருசுவில் பங்கில் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான பணித்தள திறப்பு விழா நிகழ்வு 16ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பணித்தளத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
அன்பின் பணியாளர் துறவற சபை குருக்கள் கொனேலியன் துறவற சபை குருக்கள் எனவும் அழைக்கப்படுவதுடன் இவர்கள் மாற்றுத்திறனாளிகள், மற்றும் வயோதிபர்களுக்கான பணிகளை ஆற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.