இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 29.02.2024
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், எரேமியா எதிரிகள் தனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யப் போவதாகவும், தன்மீது குற்றம்சாட்டப் போவதாகவும் ஆண்டவரிடம் முறையிடுகின்றார். எரேமியாவின் இந்த முறையீடு ஐந்தாவது முறையீடாகும்.
நாமும் நமது வாழ்க்கையில் பல தருணங்களில் நமக்கு எதிரான சூழ்நிலைகளில் பலமுறை ஆண்டவரிடம் முறையிடுகிறோம்.
“கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?” (உரோ. 8: 31). என்று புனித பவுல் கூறுவார். எனவே நாம், கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற உணர்வோடு துணிவோடு வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் 31:16-ல்,
“ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.: என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
இந்த உலகில் பல நாடுகளில் மக்களுக்கு எதிரான அரசுகள் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளினால் மக்களை நசுக்குகின்ற வேளையில், அப்பாவி மக்களை, ஆண்டவர் தனது பேரன்பால் விடுவித்தருள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இந்தத் தவக்காலத்தில் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,,
Comments are closed.