திருநீற்றுப் புதனுடன் துவங்கும் தவக்காலம்
இவ்வாண்டு தவக்காலத்தின் துவக்க நாளான திருநீற்றுப் புதனன்று மாலை உரோம் நகரின் புனித ஆன்செல்ம் கோவிலிலும், புனித சபீனா பசிலிக்காவிலும் திருவழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 14, புதன் மாலை 4.30 மணிக்கு, உரோம் நகர், அவெந்தீனோ எனுமிடத்தில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து பாவமன்னிப்பு பவனியை வழிநடத்த உள்ள திருத்தந்தை, பவனியின் இறுதியில், மாலை 5 மணிக்கு புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்குவார்.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி இயேசுவின் உயிர்ப்பு விழாவுக்கு நம்மைத் தயாரிக்கும் விதமாக, பிப்ரவரி 14, புதனன்று தவக்காலம் துவங்குவதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாளில் திருநீற்றுப் புதன் வழிபாட்டைத் தலைமையேற்று நடத்துவார்.
உரோம் நகரின் அவெந்தீனோ என்னும் சிறு குன்றிலுள்ள புனித ஆன்செல்ம் கோவிலில் பாவமன்னிப்பு பவனியைத் துவக்கி, அதன் அருகிலேயே உள்ள புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுவதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளனர் திருத்தந்தையர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
Comments are closed.