பிப்ரவரி 15 : நற்செய்தி வாசகம்
என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்
என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————
வாழ்வும் சாவும்
திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் வியாழக்கிழமை
I இணைச்சட்டம் 30: 15- 20
திருப்பாடல் 1: 1-2, 3, 4, 5, 6 (40: 4a)
II லூக்கா 9: 22-25
வாழ்வும் சாவும்
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் வாழ்வடைவர்
ஒருவருடைய வாழ்வு, அவர் எதைத் தேர்ந்தெடுக்கின்றாரோ, அதன்படி அமைகின்றது. ஒருவர் நல்லதைத் தேர்ந்தெடுத்தால், அவருடைய வாழ்வு நல்லபடியாய் அமைகின்றது. அதே நேரத்தில் அவர் தீமையைத் தேர்ந்தெடுத்தால், அதற்கேற்ப அவரது வாழ்வு அமைகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால் வாழ்வும், அவரது கட்டளையைக் கடைப்பிடியால், நம் விருப்பத்தின்படி நடந்தால் சாவும் கிடைக்கும் என்கிறது.
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் நீங்கள் எதைத் தேர்ந்தேடுக்கின்றீர்களோ, அதன்படி உங்கள் வாழ்க்கை அமையும் என்று சொல்லிவிட்டு, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்தால், அவர் அளிக்கும் நாட்டிற்குள் நீங்கள் நுழைவீர்கள் என்கிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்காததால் (இச 31: 16-18, 27-29), வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 1 ஒரு ஞானப்பாடல். இப்பாடல். இப்பாடல் இருவகையான வழிகளை, இரு வகையான மாந்தர்களை நமக்குக் குறித்துக் காட்டுகின்றது. ஆண்டவருக்கு அஞ்சி, அவரது சட்டத்தின்படி நடப்போர் பேறுபெற்றோர் என்றும், அவர்கள் வாழ்வு பெறுவர் என்றும் இது கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் தன்னைப் பின்தொடர்பவர் தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு, தன்னைப் பின்பற்றி வரட்டும் என்கிறார். தன்னலம் துறப்பதும், சிலுவையைச் சுமப்பதும் நம்முடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இணையானவை. அதனால் நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவர் அளிக்கும் ஆசிகளைப் பெறுவோம்.
ஆண்டவரின் வழியில் நடந்த கிறிஸ்தவர்
பெருநகர் ஒன்றில், சாலையோரமாய் அமைந்திருந்தது அந்தக் கிறிஸ்தவரின் வீடு. அவர் தன்னுடைய வீட்டின் முகப்பில் இருபத்து நான்கு அடி உயரச் சிலுவையை வைத்திருந்தார். அதைப் பார்க்கின்ற யாரும் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளட்டும் என்பதற்காகவே, அவர் அந்தச் சிலுவையை வைத்திருந்தார்.
Comments are closed.