இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 25.12.2023

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என எலிசபெத்து கேட்கிறார். தூய ஆவியால் ஆட்க் கொள்ளப்பட்ட எலிசபெத்துவின் வார்த்தைகளை மறுதலிப்பது தூய ஆவியைப் புறக்கணிப்பதற்கு சமம். பிரிவினை சகோதரர்கள், “ஆண்டவரின் தாய்” என்ற தூய ஆவியின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

ஆண்டவரின் மீட்புத் திட்டத்திற்கு தன்னையே கையளித்த அன்னை மரியாளிடமிருந்து தாழ்ச்சியையும், எலிசபெத்துவிற்கு பணிவிடை புரிந்த அன்னை மரியாளிடமிருந்து பிறரன்பு சேவையையும் நாம் கற்றுக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

நம் இல்லங்களில் பிறக்க இருக்கும் இயேசு பாலன் நம் குடும்பங்களில் அன்பு, அமைதி, சமாதானத்தை தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் நன்கு கிடைக்கப் பெறவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

உலக மக்களின் மீட்பிற்காக அவதரித்த இயேசு பாலனின் பிறப்பு நாளில் இயேசுவுக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்த அனைத்து குருக்கள், கன்னியர், துறவறத்தார் ஆகிய அனைவருக்காகவும் இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.