நினைவுச்சின்னங்கள், இறைமனித பிணைப்பின் சாட்சிகள்

திருப்பீடத்தின் நினைவுச்சின்னங்கள், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பின் சாட்சிகள் என்றும், ஈர்க்க்கூடிய சுற்றுலாத்தலம் மட்டுமல்ல மாறாகக் கடவுளைச் சென்றடைய உதவுவதற்கான இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 22 புதன்கிழமை கன்னியரும் மறைசாட்சியாளரருமான புனித செசிலியா நினைவு நாளன்று திருப்பீடத்தின் வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் திருப்பீடத்துறையின் நூற்றாண்டுக்காண செயல்பாடு குறித்து நடைபெற்ற மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் கலை, வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் திருப்பீடத்துறையின் தலைவர் பேராசிரியர் Francesco Buranelli அவர்களுக்கு அனுப்பப்பட்ட திருத்தந்தையின் செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது. அச்செய்தியில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ஆகியோரின் வார்த்தைகளையும் செயல்களையும் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.     

திருஅவை வாழ்க்கையின் வெளிப்படையான செயல்பாடு அதன் வழிபாட்டு நடவடிக்கைகளிலும், நம்பிக்கையின் அறிக்கையிலும் பல்வேறு ஆன்மிக வெளிப்பாடுகளிலும், தொண்டுப்பணிகள் செய்வதிலும் புலப்படுகின்றது என்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புக்கான ஒரு அசாதாரண வாய்ப்பை இந்த நினைவுச்சின்னங்கள் அடையாளப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.