அன்பே, நற்செய்தியின் வற்றாத புதுமைத் தன்மை

தெய்வீகமான, கருணை நிறைந்த, பெருமிகுதியான அன்பே, நற்செய்தியின் வற்றாத புதுமைத் தன்மை, என அக்டோபர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் வற்றாத புதுமைத் தன்மை என்பது, அதன் தெய்வீக, கருணை நிறை மற்றும் பெருமிகுதியான அன்பே எனக் கூறும் திருத்தந்தை, இந்த நற்செய்தியின் அன்பு, புனிதர்களைப்போல் அதேவழியில், அதாவது, வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் இறைவனைக் காட்ட நமக்கு அழைப்பு விடுக்கிறது, என அதில் உரைத்துள்ளார்.

மேலும், வியாழக்கிழமையன்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருப்பீட செய்தித் தொடர்பு இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், நிக்கரகுவா நாட்டில் அரசால் பழிவாங்கப்பட்டு, தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 குருக்கள் திருப்பீடத்தால் உரோம் நகருக்குள் வரவேற்கப்பட்டு உரோம் மறைமாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவித்தார்.

மேலும், அதே நாளில் உலக எபிரேயப் (யூத) பேரவையின் தலைவர் Ronald Steven Lauder அவர்களும், அப்பேரவையின் சில அங்கத்தினர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடியதை உறுதி செய்தார் திருப்பீட செய்தித் தொடர்பு இயக்குனர் புரூனி.

Comments are closed.