இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

செபமாலை மாதமான இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நாம் செபமாலை மணிகளால் மாதாவை மகிமைப்படுத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

கடவுள் எவருடைய அழிவையையும் விரும்புவதில்லை என்பதற்கு அவர் யோனாவை நினிவே மாநகருக்கு அனுப்பி வைத்ததே ஒரு சிறந்த சான்றாகும் என்பதை இன்றைய திருப்பலி முதல் வாசகத்தை நாம் வாசிக்கும் போது உணரலாம்.

நாம் ஆண்டவரது பாதைக்கு முழுமையாகத் திரும்ப நமக்கு அவர் ஒவ்வொரு நாளும் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

அடுத்திருப்பவர் மீது அன்பு கொண்டு இரக்கம் காட்டிய சமாரியரைப் போல நாமும் செயலில் வாழ்ந்து காட்டிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இன்றைய புனிதரான புனித ஜான் லியோனார்டியை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழி நடத்திட தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.