மறைசாட்சிகள் கடவுளின் தோட்டத்தின் கனிகள்

றைசாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் திருஅவையின் வாழ்க்கையுடன் இணைந்து கடவுளின் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த கனியாக செழித்து வளர்கின்றனர் என்றும், முதல் நூற்றாண்டுகளை விட நாம் வாழும் காலத்தில் மறைசாட்சிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 5 புதன்கிழமையன்று புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் ஒரு பகுதியாக புதிய மறைசாட்சிகள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற ஒரு புதிய அவையை உருவாக்கியுள்ளதாக வெளியிடப்பட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டின் ஜூபிலியை முன்னிட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கும் அவருடைய நற்செய்திக்கு சான்றுபகர்வதற்கும் தங்கள் இரத்தத்தை  கொடுத்து மறைசாட்சிகளாக இறந்த அனைவரும் மறக்கப்படக்கூடாது எனவும், திருஅவையில் உள்ள மறைசாட்சிகள் அனைவரும் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையிலிருந்து உருவானவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நம்பிக்கையின் சாட்சிகளான மறைசாட்சிகள் உண்மையான பிறரன்புப் பணிகளைச் செய்ய தூண்டுகிறார்கள் என்றும், தீமையை விட நன்மை வலிமையானது என்ற ஆழமான நம்பிக்கையை நம்மில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள் என்றும். குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவத்தையும் மரணத்தையும் கடவுளில் வென்ற கிறிஸ்துவை மறைசாட்சிகள் தங்கள் வாழ்வால் நமக்கு வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

2000 ஆம் ஆண்டு ஜூபிலியின் முதல் கால் நூற்றாண்டின் காலத்தில் விசுவாசத்தின் சாட்சிகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் தொடரவும் இந்த புதிய ஆணைக்குழு ஏற்கனவே தொடங்கப்பட்ட ஆராய்ச்சியைத் தொடரும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைசாட்சிகள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவற ஆண்கள் மற்றும் பெண்கள், பொது நிலையினர், குடும்பங்கள், மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்பவர்கள் என தங்களின் வாழ்க்கையைத் தொண்டுப்பணிகளுக்காக அர்ப்பணித்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Comments are closed.