அமைதிப் பணியை மேற்கொள்பவர்கள் கடவுளின் மக்கள்
கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுபவர்கள், அமைதியை உருவாக்குபவராக, நற்செயல்களை விரும்புபவராக, நற்செய்தியைப் பறைசாற்றுபவராக, மக்களின் வாழ்க்கை, வார்த்தை, முன்னுதாரணம் ஆகியவற்றால் அமைதிப்பணியை மேற்கொள்பவராக இருக்க வேண்டும் என்றும் இதுவே நமது கடமையும் இறைவனின் விருப்பமும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 11 ஞாயிற்றுக்கிழமை வரை காங்கோ குடியரசின் Lubumbashi என்னுமிடத்தில் நடைபெறவுள்ள 140ஆவது தேசிய நற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தையின் பெயரால் பங்கேற்க இருக்கும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய நற்கருணை மாநாட்டின் 140 வது ஆண்டு நிறைவைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், காங்கோ குடியரசின் நற்செய்தி, பல நற்செய்தி அறிவிப்பாளர்களால் ஆதரிக்கப்பட்டு, மீட்பராகிய கிறிஸ்துவை பயமின்றி கடின உழைப்பு மற்றும் அன்புடன் பிற நாடுகளுக்கு அறிவிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.