அமைதியின் விதையை உள்ளத்தில் விதையுங்கள்
நிலத்திலிருந்து மண்ணை எடுத்து மனிதனைப் படைத்த கடவுள், பூமியை அழகாக்கவும் வளர்க்கவுமே அவ்வாறு செய்தார் என்றும், அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கும் போரைத் தவிர்க்க அமைதி என்னும் விதையை நமக்குள் விதைக்க வேண்டும் என்று செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை இரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிவுற்ற நிலையில் அத்துன்பமான நிகழ்வுகள் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு, வத்திக்கானின் சினோடல் புதிய அறையில் வெளியிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நிலத்திலிருந்து மண்ணை எடுத்து கடவுள் மனிதனைப் படைத்தது, அதனை அழகாக வளரச் செய்யவேண்டும் என்பதற்காகவே என்றும், நடந்து கொண்டிருக்கும் போர் இதற்கு முற்றிலும் எதிர்மாறானது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்கள், பெண்கள், சிறார், முதியோர் என அனைவரையும் அழிக்கும் இப்போரை வளர விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைனைப் பார்த்து அதற்காக செபிப்போம் அதன் துன்பத்திற்கு நம் இதயங்களைத் திறப்போம் என்றும், இப்போர் நம்மை குறைவுபடுத்தும், அழிவுக்குட்படுத்தும் என்பதற்காக, துன்புறுவதற்கும் அழுவதற்கும் வெட்கப்பட வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.