திருமுழுக்கு பெற்ற அனைவரும் கடவுளின் மக்கள் – திருத்தந்தை
ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர பிரிவினைக்கு அல்ல என்றும், சாதாரண மனிதர், திருமுழுக்குப் பெற்றவராக, கடவுளின் தூய மக்களின் உறுப்பினராக கருதப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 18 சனிக்கிழமை வத்திக்கானின் ஆயர் மாமன்ற அறையில் பொதுநிலையினர் , குடும்பம் வாழ்வு பணித்துறையினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “லே” (LAITY) பொது நிலையினர் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் இல்லை, ஆனால் இது நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள், உடன் பிறந்தவர்கள், என அனைவரையும் உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்தார்.
மதச்சார்பற்ற உலகில், கடவுளின் மக்களாக நம்மை உண்மையிலேயே வேறுபடுத்துவது கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையே தவிர, கருதப்படும் வாழ்க்கை நிலை அல்ல என்றும், திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும், கிறிஸ்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்பதே முதன்மையானது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
Comments are closed.