இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 149:4-ல்,
“ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
தாழ்நிலையில் உள்ள குடும்பங்கள் அனைத்தையும் இறைவன் நன்கு உயர்த்த வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர்.” என வாசித்தோம்.
ஆண்டவரின் தோட்டத்தில் நல்ல கனி தரும் மரமாக நாம் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.” என வாசித்தோம்.
முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஆழ்ந்து செபிக்கும் பழக்கத்தை நம் ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும், இன்றைய புனிதருமான புனித பெக்கா தன் வாழ்நாளில் மொத்தம் ஏழு ஆலயங்களைக் கட்டினார்.
நிதிப் பற்றாக்குறையினால் குறித்த காலத்துக்கு முன்பே அருட்தந்தையர்களால் கட்டி முடிக்க இயலாத ஆலயங்கள் அனைத்தும் தடையில்லாமல் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.