இன்றைய புனிதர் (செப்டம்பர் 6)
✠ ஆண்டென் நகர் புனிதர் பெக்கா ✠
(St. Begga of Andenne)
கைம்பெண், நிறுவனர், மடாலய தலைவர்:
(Widow, Founder, and Abbes)
பிறப்பு: ஜூன் 2, 613
லீஜ், வாலூன் பிராந்தியம், பெல்ஜியம்
(Liege, Walloon Region, Belgium)
இறப்பு: டிசம்பர் 17, 693
ஆண்டென், நாமூர் மாகாணம், வாலூன் பிராந்தியம், பெல்ஜியம்
(Andenne, Province of Namur, Walloon Region, Belgium)
அடக்கம் செய்யப்பட்ட இடம்:
தூய பெக்காவின் கல்லூரி தேவாலயம், ஆண்டென், நாமூர் மாகாணம், வாலூர் பிராந்தியம், பெல்ஜியம்
(Saint Begga’s Collegiate Church in Andenne, Province of Namur, Walloon Region, Belgium)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: செப்டம்பர் 6
பாதுகாவல்: பேகின்ஸ் (Beguines)
புனிதர் பெக்கா, பெல்ஜியம் (Belgium) நாட்டிலுள்ள “ஆண்டென்” (Andenne) நகரில், ஏழு ஆலயங்களையும், ஒரு பள்ளியையும் கட்டி நிறுவியவர் ஆவார்.
இவர், “ஆஸ்ட்ரேஸியா அரண்மனையின்” (Palace of Austrasia) மேயரான “பெப்பின்” (Pepin of Landen) என்பவரது மூத்த மகளாவார். இவரது தாயாரின் பெயர், “இட்டா” (Itta of Metz) ஆகும்.
புனிதர் கெட்ரூட் (Gertrude of Nivelles) என்பவரின் மூத்த சகோதரியான இவர், “மெட்ஸ்” ஆயரான (Bishop of Metz) “அர்னால்ஃப்” (Arnulf) என்பவரின் மகனான “அன்ஸேகிஸேல்” (Ansegisel) என்பவரை மணமுடித்தார்.
இவரது கணவர் “அன்செஜிசலின்” (Ansegisel) மரணத்தின் பின்னர், அப்போதைய யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய பாரம்பரியங்களின்படி, முக்காடுள்ள ஆடையை (Veil) தேர்வுசெய்துகொண்ட இவர், ரோம் நகருக்கு புனித யாத்திரை மேற்கொண்டார்.
புனித யாத்திரையிலிருந்து திரும்பியதும், ஏழு தேவாலயங்களை நிறுவினார். மற்றும் மியூஸ் நதிக்கரையிலுள்ள (Meuse River) (ஆண்டென் சுர் மியூஸ்) (Andenne sur Meuse) ஆண்டென் (Andenne) நகரில், ஒரு கான்வென்ட் பள்ளியையும் கட்டினார். அங்கு தனது எஞ்சிய நாட்களை மடாலய தலைவராக கழித்த இவர், அங்கேயே கி.பி. 693ம் ஆண்டு, டிசம்பர் மாதம், பதினேழாம் தேதி, மரித்தார்.
இவர், பெல்ஜியம் நாட்டின், நாமூர் மாகாணத்திலுள்ள, ஆண்டென் நகரத்தின் தூய பெக்காவின் கல்லூரி தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவரை கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் புனிதராக ஏற்கின்றன.
Comments are closed.