ஐரோப்பாவை அன்னை மரியா வழிநடத்துவாராக
நம் வாழ்வில் கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று, ஆகஸ்ட் 17, இப்புதனன்று பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தனது புதன் மறைக்கல்வித் தொடரின் 17வது பகுதியை வழங்கியபின்னர், இளையோர், வயதுமுதிர்ந்தோர், புதுமணத் தம்பதியர் போன்றோரை வாழ்த்தியபோது இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நிகழ்வில் இறையழைத்தலுக்காகவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை, அண்மையில் சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நம் இவ்வுலகப் பயணத்தை, அழியாத பொருள்களை நோக்கி, அர்ப்பணிப்போடு தொடர்ந்து மேற்கொள்ள நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
துன்புறும் உக்ரைன் மக்களை மறக்காதீர்கள்
தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டு மக்களை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் அம்மக்களை மறக்கவேண்டாம், மற்றும், போருக்குப் பழக்கப்பட்ட மனநிலையில் வளரவேண்டாம் எனவும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
அமல மரி அருள்சகோதரிகள்
Comments are closed.