இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.” என ஆண்டவர் கூறுகிறார்.
கடின உள்ளம் கொண்ட அனைவரின் இதயத்தையும், இறைவன் இரக்கம் மிகுந்த இதயமாக மாற்றிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
ஆண்டவரால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய புனிதரும், ரோமப் பேரரசியுமான புனித ஹெலெனா தனது ஆன்மீகப் பயணத்தில் இயேசுவின் உண்மையான திருச் சிலுவையைக் கண்டுபிடித்தார்.
நம் அனைவரின் மீட்புக்குக் காரணமான திருச்சிலுவையின் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படவும், திருச்சிலுவை பக்தி மென்மேலும் வளரவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.