இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்று நாம் தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வினை விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் நம் அன்னை மரியா.
தாழ்ச்சியிலும், பிறரன்பு சேவையிலும் நாம் அன்னையைப் போல விளங்கிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
மனித குல மீட்பிற்காக அன்னை மரியாவையும், எலிசபெத்து அம்மாளையும் இவ்வுலகிற்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசத்தில், “உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்
நமது வாழ்வின் துன்பங்களை எல்லாம் அகற்றப் போகின்ற நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.