சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசுவை உற்று நோக்குங்கள்

கிறிஸ்துவை நாம் எவ்வாறு பின்பற்றி வந்துள்ளோம் என்பதை, இந்தப் புனித வாரத்தில் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 12, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரு குறுஞ்செய்திகள் வழியாக அழைப்புவிடுத்துள்ளார்.

“சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஒருவரை உற்றுப் பார்ப்போம். நம் பாவநிலையின் ஆணிகளால் ஏற்படுத்தப்பட்ட அவரின் வேதனைநிறைந்த துளைகளிலிருந்து மன்னிப்பு பொங்கி வழிகிறது. மிகுந்த இரக்கம், மற்றும், பரிவன்பு ஆகியவற்றோடு, சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுவை ஒருபோதும் நோக்கியதில்லை என்பதை உணர்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றி வந்துள்ளோம் என்பதை மதிப்பீடுசெய்ய நாம் விரும்பினால், நம்மைப் புண்படுத்தியவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பது குறித்து சிந்திக்கவேண்டும். இதில், அவர் நமக்குச் செய்வதைப் போலவே, நாமும் இருக்கவேண்டுமென்று பதிலுறுக்குமாறு நம்மிடம் கேட்கிறார், நல்லவர், மற்றும் தீயவர், நண்பர்கள், மற்றும், பகைவர்கள் என, அவர் நம்மைப் பிரிப்பதில்லை. நாம் அனைவருமே அவருக்கு அன்பார்ந்த பிள்ளைகள்” என்ற வார்த்தைகள் வெளியாயின.

Comments are closed.