கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தியானத்தை கிளரீசியன் சபையைச்சேர்ந்த அருட்திரு மில்பர் வாஸ் அவர்களும் கிளிநெச்சி மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கு கிளிநொச்சி புனித திரேசம்மா ஆலயத்தில் நடைபெற்ற தியானத்தை அருட்திரு ரவிராஜ் அவர்களும் வழிநடாத்தினார்கள்.
இத்தியானங்களில் சிலுவைப்பாதை, சிந்தனை தியான உரைகள் என்பவற்றுடன் திருப்பலிகளும் நடைபெற்றன. மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்திரு ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்குகளில் இருந்து 85 வரையான மறையாசிரியர்களும் கிளிநொச்சி மறைக்கோட்டப் பங்குகளில் இருந்து 130 வரையானவர்களும் கலந்து கொண்டனர்.

Comments are closed.