இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட யோனா நூலில்,
“கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.” என வாசிக்கின்றோம்.
பாவ வழியில் செல்பவர்கள் நினிவே நகர மக்களைப் போல் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்ப வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 52:2-ல்,
“என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
இந்த தவக்காலத்தில் இயேசு தன் இரத்தத்தினால் நம் பாவக்கறைகளைத் துடைத்து நம்மை சுத்திகரித்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில், “இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.”
“ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவது நலம் (எசா 55: 6).” என்று இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலில்
வாசித்திருக்கின்றோம்.
பாவம் செய்த நாம் அனைவரும் ஆண்டவரிடம் விரைந்து திரும்பிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த தவக்காலத்தில் செய்யும் நாம் செய்யும் பக்தி முயற்சிகள் அனைத்தும், இறைவனுடைய இரக்கப்பெருக்கமும், அவரது அருளும் நமக்குக் கிடைத்திடும் வகையில் அமைந்திட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.