வவுனியா கன்னாட்டி புனித சூசையப்பர் ஆலய அபிஷேக விழா
புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா ஆயர்தந்தை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் அனைவரையும் இன்னிசை வாத்தியங்களோடு ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டபின் திருப்பலி ஆரம்பமாகி கூட்டுத்திருப்பலியாக மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டது.
திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய பேரருட் கலாநிதி இம்மனுவேல் பெர்ணாண்டோ ஆண்டகையினால் தலைமையேற்று ஒப்புகொகொடுக்கப்பட்டது.
தொடர்ந்து கலைநிகழ்வும், ஆயர் தந்தை அவர்களையும், மற்றும் அருட்தந்தையர்கள், மற்றும் ஆலய கட்டுமானத்திற்கு உதவி புரிந்தவர்கள் அனைவரையும் பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இவ்விழாவினை ஒழுங்குபடுத்தி தேவையான ஆயத்தங்களை செய்து ஒத்துழைப்பு வழங்கிய பங்குத்தந்தை அன்ரனி சோசை அடிகளாருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளையும், இனிய நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மன்னார் கத்தோலிக்க மீடியா இதை ஒளிபரப்பு செய்திருந்தது.
Comments are closed.