இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நீங்கள் ஆள் பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகள் என அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.
கிருஸ்தவர்களாகிய நாம் பணத்தினாலோ, அதிகாரத்தாலோ, ஜாதியினாலோ ஆள் பார்த்து செயல்படுகின்ற போக்கை ஆண்டவர் முற்றிலும் வெறுக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 34:6-ல்,
“இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.” என கூறப்பட்டுள்ளதை வாசித்தோம்.
நமது நெருக்கடியான நேரங்களில் ஆண்டவரை, ‘அப்பா’, ‘தந்தாய்’ என கூவியழைப்போம். அத்தருணங்களில் அவர் நம்மை விடுவித்துக் காத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்”. என இயேசு கிறிஸ்து பேதுருவிடம் கடிந்து கொண்டதைக் கண்டோம்.
நாம் மனிதர்களுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் இறைவனுக்கு ஏற்றவை பற்றி மட்டுமே எண்ண வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்து வருவதற்காக நம் இரக்கத்தின் ஆண்டவருக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.