இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது’ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.
அலகை நமக்குத் வருவிக்கும் சோதனையை நாம் நம்பிக்கையுடனும், துணிவுடனும் வெற்றி கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 94:19-ல்,
“என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
மனதில் கவலைகள் பெருகும் போது நமக்கு உண்மையான ஆறுதல் அளிப்பவர் ஆண்டவர் ஒருவரே என்பதை என்றும் மனதில் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.” என நமதாண்டவர் இயேசு கூறியதை வாசித்தோம்.
ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்தலே அவர்மீது செலுத்தும் உண்மையான அன்பாகும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இயேசுசபை துறவியும், இன்றைய புனிதருமான புனித கிளாடி டி லா கொலொம்பியர் இயேசுவின் திருஇருதய பக்தியை தீவிரமாக பரப்பியவர் ஆவார்.
இயேசுவின் திருஇருதய பக்தி மேன்மேலும் வளர வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாயான கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.